| மாணவனுக்கு கத்தி குத்து: எலக்ட்ரீசியன் கைது Dinamalar
மாணவனுக்கு கத்தி குத்து: எலக்ட்ரீசியன் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:24

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், மாணவனை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கிரிகதிர்வேல், இவரது மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மோகன்பிரபு, 20, அஜீத்குமார், 15 ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், அஜீத்குமார் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.


கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று, ஏழு ஆண்டுகளாக, இரு மகன்களுடன் பத்மபிரியா தனியாக வசிக்கிறார்.இந்நிலையில், மாணவர் அஜித்குமார் மீது கிணத்துக்கடவு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் அய்யசாமி, 37, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று அய்யசாமி, மாணவர் அஜீத்குமாரை கத்தியால் குத்தினார். காயமடைந்த அஜீத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அய்யாசாமியை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X