| பைக்கில் சென்றவர் பலி: விபத்தில் மூவர் காயம் Dinamalar
பைக்கில் சென்றவர் பலி: விபத்தில் மூவர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:24

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதியதில், பைக் ஓட்டியவர் கீழே விழுந்து இறந்தார்; மூவர் காயமடைந்தனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள நெ.10 முத்துாரை சேர்ந்தவர் வெற்றிவேல், 27, இவரது நண்பர் ரஜீத்குமார். இருவருக்கும் சொந்தமாக, சூலுார் லட்சுமி நாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை உள்ளது.


கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக, வெற்றிவேல், ரஜீத்குமார் இருவரும் பைக்கில் நேற்று முன் தினம் இரவு கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.ரோட்டில் சென்றனர்.அப்போது, பீகார் மாநிலம், நரேன்பூர் பகுதியை சேர்ந்த பீனாநாத் மேஸ்திரி, 31, நரேஷ்யாதவ், 55, ஆகிய இருவரும், சொலவம்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு கம்பெனிக்கு நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதியது.விபத்தில், பைக் ஓட்டி வந்த வெற்றிவேல் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.பைக் பின் சீட்டில் அமர்ந்திருந்த ரஜீத்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்பட மூவரும் காயமடைந்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X