| விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Dinamalar
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:24

சங்கராபுரம்:விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் நாகராஜன், உத்ரகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் ஸ்டாலின் மணி, மா.கம்யூ., வட்ட செயலர் பழனி, விவசாயிகள் சங்க வட்ட செயலர் கோவிந்தன், மாவட்ட பொருளாளர் ராமகண்ணு, ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் மணிகண்டன், வாலிபர் சங்க வட்ட தலைவர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை துார்வார வேண்டும். வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X