ஊரக வளர்ச்சி முகமை பணிகள்: கலெக்டர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:30

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் நடக்கும் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் பசுமை வீடு திட்டம், துாய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புதிய சாலை, சாலை மேம்பாட்டுப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் ஆகியவற்றினை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.மாடூர் முதல் நிறைமதி வரை பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் சார்பில் 103 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலையின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ஊரக பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறைகளை முழுமையாக போக்கவும், தனி நபர் கழிவறை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா, தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் முத்தழகு, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோ, புஷ்பராஜ், பி.டி.ஓ.,க்கள் ஜோசப் கிறிஸ்துராஜ், ராமதாஸ், உதவி பொறியாளர்கள் அருண்ராஜா, ராஜசேகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X