சூலுார்:சூலுார் ஒன்றியத்தில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகளை, கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கலெக்டர் ராஜாமணி நேற்று இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சூலுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்கஅறிவுறுத்தினார்.முத்துக்கவுண்டன்புதுார் ஊராட்சி முதலிபாளையத்தில், நாலரை ஏக்கரில் அமைந்துள்ள நாற்றுப்பண்ணையை பார்வையிட்டார். சுகாதார பணியாளர்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கணியூர் ஊராட்சியில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, புதுப்பாளையம் முதல் தண்ணீர்பந்தல் வரையிலான, 2 கி.மீ., ரோட்டில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் மீனாகுமாரி, பி.டி.ஓ.,(ஊராட்சிகள்) செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.