| மாணவர்கள் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சர் யோசனை Dinamalar
மாணவர்கள் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சர் யோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:34

மேட்டுப்பாளையம்:''மாணவர்கள் நன்கு படித்து அறிவியல் விஞ்ஞானிகளாகவும், கலெக்டராகவும், அரசியலில் அமைச்சர்களாகவும் வரவேண்டும்,'' என, நீலகிரி எம்.பி., ராசா கூறினார்.மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நீலகிரி எம்.பி., ராசாவிடம் 'ஸ்மார்ட்' வகுப்பு அமைக்க நிதியுதவி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.


அதன்பேரில், 'ஸ்மார்ட்' வகுப்புக்கு தேவையான அனைத்து கம்யூட்டர்கள், தொடுதிரை ஸ்கிரீன் ஆகியவை அமைக்க, 2.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.இவ்வகுப்பு திறப்பு விழா பள்ளியில் நடந்தது. சி.எஸ்.ஐ., பள்ளி தாளாளர் வில்சன் தலைமை வகித்தார். சர்ச் பாதிரியார் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி வரவேற்றார்.


எம்.பி., ராசா ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து பேசுகையில்,''இப்பள்ளியில் அமைத்துள்ள ஸ்மார்ட் வகுப்பறை, தனியார் பள்ளிக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.இங்கு படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து அறிவியல் விஞ்ஞானிகளாகவும், கலெக்டராகவும், அரசியலில் அமைச்சர்களாகவும் வரவேண்டும். இவ்வாறு ராசா பேசினார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், காரமடை ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை எஸ்தர் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X