உளுந்தூர்பேட்டையில் கடையடைப்பு போராட்டம் கடைகள் இடிப்பதை கண்டித்து அரை நாள் கடையடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:36

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடைகளை இடிப்பதை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அருகே திருவெண்ணெய்நல்லுார் நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் விருதாசலம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதிக்கு இடைப்பட்ட இருபுறங்களிலும் உள்ள கடைகளை இடித்துவிட்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது.மேலும் விருதாசலம் நெடுஞ்சாலை சந்திப்பு, உழவர்சந்தை எதிரே ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் நடைபெற உள்ளது. கடைகளை இடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் கருதினர்.அதனால், கடைகளை இடிக்கக் கூடாது என வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.இந்த கடையடைப்பு போராட்டத்தால் அத்தியாவசிய கடைகளான டீ கடை, பூக்கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.ஆர்ப்பாட்டம்உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் வியாபாரி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் முகமதுகனி தலைமை தாங்கினார். மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்புரையாற்றினார். கடலூர் மண்டல தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் வைத்தியநாதன், முருகன், நகர செயலர் டேனியல்ராஜ், ம.தி.மு.க., மாவட்ட செயலர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.கடைகள் திறப்புவியபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் நேற்று கடைகள் இருக்காது என பொதுமக்கள் கருதினர். ஆனால் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை துவக்கி மதியம் 12:00 மணியளவில் முடித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்த அரை நாள் மட்டுமே கடைகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் வியாபாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட அனைவரது கடைகளும் திறக்கப்பட்டன.



 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X