| விடியலை தேடி! அன்னூர் மக்களுக்கான தேவைகள் Dinamalar
விடியலை தேடி! அன்னூர் மக்களுக்கான தேவைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:37

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டங்களும், கோரிக்கைகளும், பிரச்னைகளும் தீர்க்கப்படுமா, என மக்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.அவிநாசி தொகுதிக்குட்பட்ட அன்னுார் தாலுகா மற்றும் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அன்னுார் ஒன்றியத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.


இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மருத்துவமனை மேம்பாடுஅன்னுார் தாலுகா மருத்துவமனையில், 48 படுக்கை மட்டுமே உள்ளது. அன்றாடம், 500 புறநோயாளிகள் வரும் நிலையில் டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் என பல பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளன. சிகிச்சைக்கான கருவிகளும் போதுமானதாக இல்லை.


அறுவை சிகிச்சை அரங்கு, ஆய்வுக்கூடங்களும் இல்லை. கட்டடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்.விரிவான குடிநீர் திட்டம்அன்னுார் வட்டாரத்துக்கு, திருப்பூர், 1 மற்றும் 2, திருப்பூர் வழியோர கிராம கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. ஆனால் அன்னுாரிலுள்ள, 21 ஊராட்சிகளில் இக்குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னுாரில், 10 நாட்களுக்கு ஒரு முறை பவானி ஆற்று நீர் சப்ளை செய்யப்படுகிறது.சில கிராமங்களுக்கு ஆற்றுநீரே வருவதில்லை. போர்வெல் நீரை மக்கள் நம்பி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். முழுமையான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.மின்மயானம் அமைத்தல்அன்னுார் தாலுகாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் மயானம் அமைக்க, அரசு, ரூ.1.50 கோடி ஒதுக்கியது. பொதுமக்கள் 1.50 கோடி ரூபாயுக்கு பங்கு தொகை செலுத்தியுள்ளனர்.ஆனால் அதற்கான பணிகள் துவங்காமல் உள்ளது. இனியும் கெரசின், டீசல், விறகு பயன்படுத்தியே இறந்தவர்களை தகனம் செய்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை அன்னுார் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதற்கான இடத்தை தேர்வு செய்யாமல் அத்திட்டம் முடங்கி கிடக்கிறது. அன்றாடம் சேகரமாகும் டன் கணக்கிலான குப்பை அன்னுார் குளத்தில் கொட்டி, தீ வைத்து எரிக்கப்பட்டு அன்னுார் பகுதியே சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.


இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நீர் வழி துார்வாருதல்அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், காட்டம்பட்டி, கரியாம்பாளையம், கஞ்சப்பள்ளி, பூலுவபாளையம் உள்ளிட்ட, 50 ஏக்கருக்கு மேல், 10 குளங்கள் உள்ளன. இக்குளங்களுக்கு மழை நீர் வரும் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால், மழை நீர் வருவதில்லை.


மழைநீர் பாதைகளை துார்வாரும் திட்டங்களை வகுக்க வேண்டும்.அன்னுார் தாலுகாவாகி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், அன்னுார் கிளை நுாலகம் தாலுகா நுாலகமாக தரமுயர்த்தப்படாமல் உள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இ சேவை மையங்கள் மூடிக் கிடக்கின்றன. ஊராட்சிகளில் கட்டடப்பட்ட நுாலகங்களில் பெரும்பாலானவை திறக்கப்படாமல் உள்ளன. அன்னுாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். கோவைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும். அன்னுாரில் கோர்ட் அமைக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X