தையல் கடையாக மாறிய அரசு கட்டடம் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் 'குறட்டை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
06:48
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 05:39

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு கட்டடத்தில் தையல் கடை இயங்கி வருகிறது.


தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராமங்களிலும், கிராம சேவை கட்டடம், நுாலகம், பஞ்சாயத்து அலுவலகம், துணை செவிலியர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களை கட்டிக் கொடுத்துள்ளது.குறிப்பாக சுய உதவிக்குழுக்கள் கூட்டம் நடத்துவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும், சுய உதவிக்குழு கட்டடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் கிராமத்தில், ஊரகவளர்ச்சித்துறை மூலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலக கட்டடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சுய உதவிக்குழுக்கள் மீட்டிங் நடத்துவதற்கும், விழிப்புணர்வு முகாம்கள், தையல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிப்பதற்கும் இந்த கட்டடத்தை பயன்படுத்தி வந்தனர்.ஆனால், அந்த கட்டடத்தை சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்தாமல் விட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்தி, அந்த கட்டடத்தில், அதே பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி ஒருவர் தையல் கடை நடத்தி வருகிறார்.இந்த கட்டடம் தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதிகாரிகள், பி.டி.ஓ., கட்டுப்பாட்டிற்குள் வரும் கட்டடங்களை ஆய்வு செய்வது கிடையாது.


குறிப்பாக பி.டி.ஓ., கட்டுப்பாட்டில் உள்ள அதிக கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.இந்த கட்டடங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று தான், அரசு கட்டடத்தை ஒருவர் தையல் கடையாக மாற்றி நடத்துவது வேடிக்கையாக உள்ளது.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பி.டி.ஓ., அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், கடை வைத்திருப்பவர் சுய உதவிக்குழு நடத்தும் ஒரு பெண்ணின் கணவர் என்பதால், அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X