ஊட்டி:பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், கூடலுார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று விடுமுறை அளித்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.நேற்றிரவு மழை காரணமாக, ஊட்டி காந்தல், பிங்கர்போஸ்ட், ரோஸ்கார்டன் சுற்றுப்பகுதியில், மரங்கள் விழுந்து மின்துண்டிப்பு ஏற்பட்டதால், இதை சரி செய்யும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.