| உடுமலையில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு Dinamalar
உடுமலையில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:43

உடுமலை:மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையில், கடந்த, 8ம் தேதி, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில், 'கிறிஸ்டியன் வெல்பேர் யூனியன்' சார்பில், பைபிள் வினியோகம் செய்தனர்.இதற்கு பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோதல் சூழல் உருவானதால், பைபிள் வினியோகித்தவர்களை, போலீசார், உடுமலை ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.


இரு தரப்பிலும், போலீஸ் ஸ்டேஷன் முன்பு நுாற்றுக்கணக்கானவர்கள் கூடினர். இரு தரப்பினரையும், கலைத்து போலீசார் பேச்சு நடத்தினர்.இந்து முன்னணி நகர துணைச்செயலாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், ஆல் இந்தியா கிறிஸ்டியன் வெல்பேர் யூனியன் செயலர், கிறிஸ்டோபர் டேவிட் எட்வின் மற்றும் ஒரு ஆண், இரு பெண்கள் என நான்கு பேர் மீது, அத்துமீறி நுழைதல், ஒரு மதத்தை இழிவு படுத்துதல் ஆகிய பிரிவுகளில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X