| பரிதாபம்! செஞ்சி மார்க்கெட் கமிட்டி தொழிலாளர்கள் நிலை...நெல் வரத்து குறைந்ததால் வேலையின்றி பரிதவிப்பு Dinamalar
பரிதாபம்! செஞ்சி மார்க்கெட் கமிட்டி தொழிலாளர்கள் நிலை...நெல் வரத்து குறைந்ததால் வேலையின்றி பரிதவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:43

தமிழகத்தில் நெல் வரத்தில் முதல் இடத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டியாக செஞ்சி மார்க்கெட் கமிட்டி உள்ளது.


நெல் வரத்து அதிகம் வரும் கமிட்டி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.அதிக அளவில் வியாபாரிகள் போட்டி போடுவதால் இங்கு மற்ற மார்க்கெட் கமிட்டிகளை விட நெல்லின் விலை அதிகமாக இருக்கும். எனவே சீசன் நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் கொண்டு வருகின்றனர்.நெல் வரத்து அதிகமாக இருப்பதால் இங்கு 92 எடை பணியாளர்கள், 350க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் சுமை துாக்கும் தனியார் நெல்மண்டி தொழிலாளர்கள், 25க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், 20க்கும் மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு டிசம்பர், ஜனவரி மாதத்தில் சீசன் உச்சத்தில் இருக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மூட்டைகள் வரை வரத்து இருக்கும். இரண்டாவது சீசனாக ஏப்ரல், மே மாதத்தில் 15 ஆயிரம் மூட்டைகள் வரை தினமும் நெல் வரத்து இருக்கும். பிற மாதங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4000 மூட்டைகள் வரை வரத்து இருக்கும்.சீசன் நேரம் தவிர மற்ற மாதங்களில் வெளி மாவட்டத்தில் இருந்து நெல் வரத்து இருக்காது. மற்ற மாதங்களில் செஞ்சி பகுதி விவசாயிகள் மட்டுமே நெல் கொண்டு வருவார்கள்.


கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டுள்ள வறட்சியினால் செஞ்சி பகுதியில் கிணறுகள் வறண்டு விட்டன.இதனால் இந்த ஆண்டு கோடையில் 20 சதவீதம் அளவிற்கே நெல் சாகுபடி நடந்தது. இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைக்கும் குறைவாகவே நெல் வரத்து உள்ளது.நேற்று 33 விவசாயிகள் 300 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அடுத்து வரும் நாட்களிலும் இதே நிலையே நீடிக்கும். நெல் மூட்டைகளின் வரத்து குறைந்ததால் மூட்டை மாற்றும் தொழிலாளர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை வருவாய் ஈட்டியவர்கள், தற்போது 50 ரூபாய் கூட வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அடுத்து மழை பொழிந்து சாகுபடி நடந்து, அறுவடை நடந்தால் மட்டுமே இவர்களுக்கு வழக்கமான வருவாய் கிடைக்கும் அதுவரை இவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாகவே தொடரும்.தண்ணீர் இன்றி அவதிசெஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி வருகின்றனர். இந்த கட்டத்தின் மீது டேங்க் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. மேல்நிலை தொட்டியை இடித்து விட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தற்காலிக ஏற்பாடாக சின்டெக்ஸ் டேங்க் வைத்து, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் நிரப்பி குடிநீர் வழங்க வேண்டும் என தொழிலாளர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நிவாரணம் வேண்டும்


இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் சீசன் இல்லாத நாட்களில் வேலை குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீனவர்களுக்கு மீன் பிடி தடை காலத்தில் வழங்குவததை போல், மார்க்கெட் கமிட்டி தொழிலாளர்களுக்கும் சீசன் இல்லாத மாதங்களில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த மாதத்தில் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கவும், சீருடை வாங்கவும் கடன் வாங்கும் நிலை தான் உள்ளது' என்றனர்.தண்ணீர் இன்றி அவதிசெஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி வருகின்றனர். இந்த கட்டத்தின் மீது டேங்க் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. மேல்நிலை தொட்டியை இடித்து விட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தற்காலிக ஏற்பாடாக சின்டெக்ஸ் டேங்க் வைத்து, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் நிரப்பி குடிநீர் வழங்க வேண்டும் என தொழிலாளர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X