வேலைவாய்ப்பு முகாம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:44

விழுப்புரம்:தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், வரும் 14ம் தேதியன்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.


கலெக்டர் சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று, 'வேலைவாய்ப்பு வெள்ளி' என்ற தலைப்பில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் இதுவரை 7,214 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இந்த வாரத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 14ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளன.பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயக் குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X