ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அருகே ஆள் கடத்தல் வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த மூங்கிலாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; இவரை கடந்த 2ம் தேதி கோமாளூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 45; மற்றும் பாசார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 37; செல்வராஜ் ஆகியோர் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அன்று முதல் ஆறுமுகம் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த தந்தை கணபதி ரிஷிவந்தியம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில் முன்விரோத பிரச்னை தொடர்பாக ஆறுமுகத்தை, சங்கர் தரப்பினர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. உடன் சங்கர், ஏழுமலை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.