| சாலை பாதுகாப்பு பிரசுரங்கள் வழங்கல் Dinamalar
சாலை பாதுகாப்பு பிரசுரங்கள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:49

விழுப்புரம்:வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


சர்வதேச ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலார் சுகுந்தகுமார் வரவேற்றார். தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முஸ்தாக், ரமேஷ், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அந்த வழியாக வந்த பஸ், லாரி, வேன், கார் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, வாகன ஓட்டுனர்களிடம் இனிப்பு மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.சங்கத்தின் அமைப்பு செயலர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X