செஞ்சி:அனந்தபுரத்தில் பேரூராட்சி அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
அனந்தபுரம் பேரூராட்சி மற்றும் விக்கிரவாண்டி தாலுகா நுகர்வோர் கண்காணிப்பு குழு சார்பில் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் தலைமையில், நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா, பேரூராட்சி ஊழியர்கள் சோமசுந்தரம், பரிமளா, தேவிகா, பத்மா மற்றும் பரப்புரையாளர்கள் அஞ்சலி, ராதா பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.