| ஜமாபந்தியில் விவசாய நலதிட்ட உதவிகள் Dinamalar
ஜமாபந்தியில் விவசாய நலதிட்ட உதவிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:53

சின்னசேலம்:சின்னசேலத்தில் நடந்த ஜமாபந்தியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கினார்.


சின்னசேலத்தில் கடந்த வாரம் முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜந்தாவது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் கடத்துார், தெங்கியாநத்தம், எலியத்துார், பைத்தந்துறை, தொட்டியம், உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். நில அளவை உதவி இயக்குனர் மணிவண்ணன், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார்கள் சையத்காதர், இந்திரா, ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் குணசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் 485 மனுக்கள் பெறப்பட்டது. வேளாண்துறை சார்பில் 15 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும், 47 பயனாளிகளுக்கு பட்டா நகல்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல துணை தாசில்தார் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X