அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்: அமைச்சர் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
07:01

காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவம் தரிசனத்திற்கு, சிறப்பு கட்டணம், 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உண்டு என, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று, காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர், இம்மாதம் இறுதியில் வெளியில் எடுக்கப்படுகிறார்.


ஜூலை, 1 முதல், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள்வார்.இந்நிகழ்ச்சிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.


பின் வரதராஜப் பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது,அத்தி வரதர் வைபவத்திற்காக, தினமும், 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். ஒன்பது மருத்துவக்குழு, 14 ஆம்புலன்ஸ், ஒன்பது தீயணைப்பு வாகனம், இவ்விழாவிற்காக, 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X