| குடிநீர் கேட்டு சாலை மறியல் Dinamalar
குடிநீர் கேட்டு சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
07:01

மீஞ்சூர்:குடிநீர் கேட்டு, கிராம மக்கள் காலிக் குடங்களுடன், திருவொற்றியூர் - -மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.மீஞ்சூர் அடுத்த, சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கிடைக்கும் குடிநீரும் உவர்ப்பாக இருப்பதால், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிஉள்ளனர்.


குடிநீர் தட்டுப்பாடு குறித்து, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறி, நேற்று, மேற்கண்ட கிராம மக்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவொற்றியூர் - -மீஞ்சூர் சாலையில், கவுண்டர்பாளையம் பகுதியில், வாகனங்களை மறித்து, குடிநீர் பிரச்னைத் தீரும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி, மறியலை தொடர்ந்தனர்.


தகவல் அறிந்த மீஞ்சூர் காவல் துறையினர், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு மேற்கொண்டனர்.பேச்சுக்கு வந்த அதிகாரிகளிடம், குடிநீர் சீராக வினியோகிப்பதில்லை. உவர்ப்பாக உள்ள தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?, தண்ணீர் கேன்களை வாங்கி, குடிக்க பயன்படுத்த வேண்டி உள்ளது. சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.இது தொடர்பாக, துரித நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்துச்சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X