வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்..! பயன்படுத்தும் ஸ்தபதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:04


மதுரை, மதுரை மாவட்டம் மேலுார் அருகேவுள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலுக்கு அத்தி மரத்தில் சிம்மம், நந்தி, யானை வாகனங்களை செதுக்கும் பணியில் ஸ்தபதிகள் இரு மாதங்களாக தீவிரமாக உள்ளனர்.மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான இக்கோயில் பழமையும், புராதன சிறப்பும் மிக்கது. திருவிழாக்களில் சிம்மம், நந்தி, யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவர். வாகனங்கள் பழுதாகி இருப்பதால் கோயில் சார்பில் புதிய வாகனங்கள் தயாரிக்க தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் நடவடிக்கை எடுத்தனர். இதற்கான டெண்டர் கோரப்பட்டது. அத்தி மரத்தில் இரு நந்திகள், யானை, சிம்ம வாகனங்களில் தலா ஒன்று தயாரிக்க சேலம் தம்மம்பட்டி ஸ்தபதி ரவி டெண்டர் எடுத்தார்.ரவி கூறியதாவது: கிருஷ்ணகிரியில் அத்திமரங்கள் அதிகம். அத்திமரம் சிவ வம்சத்தை குறிக்கும் 'பால் மரம்' என அழைக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த அத்தி மரக்கட்டைகளில் சுவாமி வாகனங்கள் தயாரிக்கப்படும். காலப்போக்கில் மரம் இலகுவாகி விடும். சுவாமியுடன் வாகனத்தை துாக்கி செல்ல வசதியாக இருக்கும். திருவாதவூர் கோயிலுக்கு தலா 450 கிலோ எடையுள்ள இரு நந்தி வாகனங்கள், 600 கிலோ எடையுள்ள யானை வாகனம், 400 கிலோ எடையுள்ள சிம்ம வாகனம் செதுக்கும் பணியில் 7 சிற்பிகள் இரு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். இப்பணி ஒரு மாதத்திற்குள் முடியும். பின் வர்ணம் பூசப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth - Chennai,இந்தியா
13-ஜூன்-201914:27:49 IST Report Abuse
Vasanth இப்பதிவு தொடர்பில்லை என்றாலும், ஒருவன் கோவில் பெண் சிலைகளை வைத்து சர்ச்சை படம் வெளியிட்ட சமூகஊடக செய்தி அடிப்படையில் இப்பதிவு.... ஐய்யா, சிலை வடிப்போரே, ஓவியம் வரைவோரே "கலை" என்ற பெயரில் தெய்வ சிலைகளுக்கு சிறு துணியில் அங்கம் தெரியும்படி ஆடையோ அல்லது ஆடையே இல்லாமல் சிலையோ, படங்களோ நிர்மானிக்காதீர்கள். அக்காலத்தில் அதுதான் ஆடை. அரசிகள் முதல் குடும்ப பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் அதைத்தான் அணிந்தனர். கோயில் சிலைகளும் அதன் அடிப்படையில்தான் செதுக்கப்பட்டது. சிற்ப சாஸ்திரம் என்றோ, அக்கால ஆடை என்றோ அதே முறையினை சமகாலங்களிலும் தொடராதீர்கள். அக்கால ஆடைகள், தற்போது கவர்ச்சி மற்றும் ஆபாச நடனமாடும் நடிகைகள் அத்தகைய காட்சிகளில் மட்டுமே அணிய பயன்படுகின்றது. அதே ஆடைகளை கோயிலில் குறிப்பாக பெண் மற்றும் பெண் தெய்வ சிலைகளுக்கு பயன் படுத்தாதீர்கள். காலத்திற்கு தகுந்தாற்போல் நாம் வழிபாட்டு முறையினால் பல கடும் விரதம், ஜபம், etc ...... என பலவற்றை மாற்றி கொண்டு விட்டோம். அப்படி இருக்கும் பொழுது, கோவில் சிலைகளில் மட்டும் ஏன் அதே பண்டையகால ஆடைகள் அணிவித்து இந்து பெண்களையும், பெண்தெய்வங்களையும் பிறர் தவறாக பேசவும், அவமதிக்கவும் இடம் தரவேண்டும்? அந்த சர்ச்சைக்குரிய கீழ்த்தரமான ஒருவனின் சமூகவலை பதிவே இதற்க்கு தக்க உதாரணம். சிலைகள் கூட கண்ணியமான ஆடை அணிந்திருந்தால்தான் அனைவரும் உண்மையில் மதிப்பர். அரசு மற்றும் ஆன்மிகம் தொடர்பானவர்கள் இதனை வலியுறுத்தி ஏதேனும் முயற்சி செய்வார்களா? . . .
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜூன்-201908:44:49 IST Report Abuse
சுந்தரம் இந்த ஸ்தபதிகளின் முகவரி அல்லது தொலைபேசி எண்கள் கிடைக்குமா? எங்கள் கோவிலுக்கு சிறிய அளவிலான அன்னபட்சி வாகனம் ஒன்று தேவைப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X