ஐகோர்ட் புண்ணியத்தால் சுரங்கப்பால திட்டத்திற்கு...உயிர்!;அரசியல் அழுத்தத்தை மீறி அதிகாரிகள் நிலம் எடுப்பு:கைகூடியது குரோம்பேட்டை மக்களின் கனவு திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
04:16

குரோம்பேட்டை:ரயில்வே நிர்வாகம், 4 கோடி ரூபாய் செலவழித்து, பணிகளை முடித்த நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாக, நிலம் எடுக்க முடியாமல், 10 ஆண்டுகளுக்கு மேலாக, குரோம்பேட்டை, ராதா நகர் சுரங்கப்பால பணிகள் முடங்கின. நெடுஞ்சாலைத் துறை, இந்த திட்டத்தை கைவிட்ட நிலையில், ஐகோர்ட் உத்தரவால், சுரங்கப்பாலத்திற்கு தேவையான நிலம், தற்போது எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையையும், நெமிலிச்சேரி கிராமத்தையும் இணைக்கும் வகையில், ராதா நகர் பிரதான சாலை உள்ளது. இச்சாலை, ஜி.எஸ்.டி., சாலையுடன் இணையும் இடத்தில், எல்.சி., 27 என்ற எண் கொண்ட, ரயில்வே கடவுப்பாதை உள்ளது.முடிவு


இந்த பாதையை தினசரி, இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும், கடவுப்பாதையை அடைக்கும் போது, ஜி.எஸ்.டி., சாலை - ராதா நகர் பிரதான சாலை என, இரண்டு புறங்களிலும், வாகனங்கள் வரிசைக்கட்டி, மணிகணக்கில் காத்திருக்கின்றன.அந்த இடத்தில், ஆண்டு தோறும், 35 - 40 பேர் வரை, ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு, அங்கு இலகுரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2007ம் ஆண்டு, ரயில்வே பகுதியில் பணிகள் துவங்கின. ரயில்வே நிர்வாகம், இதற்காக, 4 கோடி ரூபாய் செலவிட்டது.ரயில்வே பகுதியில், பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், பணிகள் துவக்கப்படவில்லை.முடங்கியதுஇந்த சுரங்கப்பால திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. நில உரிமையாளர்கள், 28 பேர், கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினர்.இதனால் அத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு மேல் முடங்கியது. பல்லாவரம் நகர ஆளும்கட்சி பிரமுகர் ஒருவரின் அழுத்தம் காரணமாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒரு கட்டத்தில், திட்டம் கைவிடப்பட்டதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூட, பதில் அளித்திருந்தனர்.நினைவூட்டல்ஆனாலும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, நலச்சங்கங்கள் தொடர்ந்து போராடி வந்தன.திட்டத்தின் அவசியம் குறித்து, அரசுக்கு நினைவூட்டும் விதமாக, நம் நாளிதழ், தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்நிலையில், நவம்பர் மாதம், இது சம்பந்தமான வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்து, தடை உத்தரவை நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கு, பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில், நன்றி தெரிவிக்கப் பட்டது.அதேநேரத்தில், தாமதமின்றி பணியை துவக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை எழுந்தது.துவக்கம்லோக்சபா தேர்தல் காரணமாக, நெடுஞ்சாலைத் துறை, சுரங்கப்பாதை பணியை துாசி தட்டாமல் வைத்திருந்தது.தற்போது, தேர்தல் முடிந்ததை அடுத்து, சுரங்கப்பால திட்டத்திற்கான பணிகளை துவக்க ஏதுவாக, கட்டடங்களை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டடங்கள் இடிக்கப் பட்டன. இதையடுத்து, ஓரிரு வாரங்களில், பணிகள் முழுவீச்சில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ராதா நகர் சுரங்கப்பால திட்டத்திற்கு, 46 கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. இதில், 26 பேர் மட்டுமே, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மற்றவர்கள் வழக்கும் தொடரவில்லை; இழப்பீடும் பெறவில்லை. தற்போது கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்க, நெடுஞ்சாலைத் துறை முன் வந்தது.ஆனால், நில உரிமையாளர்கள், இழப்பீட்டு தொகை பெற முன்வரவில்லை. இதனால், நீதிமன்றத்தில், நிலம் எடுப்பு தொகையை, 'டிபாசிட்' செய்துள்ளோம். இரண்டு நாட்களில், கட்டடம் இடிப்பு பணி நிறைவு பெறும் அதன் பின்,புதிதாக ஒப்பந்தம் கோரப்பட்டு,நெடுஞ்சாலை துறை பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை, ஓராண்டிற்குள் முடிப்போம்.நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிதிட்ட விபரம்!மதிப்பீடு - ரூ.28 கோடிநீளம் - 825 அடிஉயரம் - 11.5 - 9 அடிஉள்கூறு அகலம் - 24.75 அடிவாகன பயன்பாடு - 18.15 அடிபாதசாரிகள் பயன்பாடு - 6.6 அடிஇடிக்கப்படும் கட்டடங்கள் - 46தினமலருக்கு நன்றி!பல்லாவரம் நலச்சங்கங்களின் இணைப்பு மைய தலைவர், வி.சந்தானம், 81 கூறியதாவது: இத்திட்டம், எங்களின் நீண்ட நாள் போராட்டம். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அதேபோல், திட்டம் முடங்கியது குறித்து, அரசுக்கு அடிக்கடி நினைவூட்டும் விதமாக, செய்தி வெளியிட்டு வந்த, 'தினமலர்' நாளிதழுக்கும் நன்றி. சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினசரி, ஒன்றரை லட்சம் பேர் பயனடைவர். குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரிய நன்மை கிடைக்கும். அதேபோல், ரயிலில் அடிபட்டு இறப்பதும் குறையும். கட்டடங்களை இடிப்பதோடு விட்டு விடாமல், விரைந்து பணி துவங்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NAGHARAJAN S N - chennai,இந்தியா
15-ஜூன்-201908:02:36 IST Report Abuse
NAGHARAJAN S N இதுபோன்ற நல்ல திட்டங்கள் தடை நீங்க, நீதிமன்றங்களுடன் , தினமலரும் ,நலச்சங்க செய்தியை தக்கசமயத்தில் பிரசுரித்து வெற்றி அடைய உதவியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
13-ஜூன்-201911:40:33 IST Report Abuse
sathish நல்ல காரியத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட தினமலருக்கு ஜெ ஜெ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X