இ.எஸ்.ஐ., அலுவலகம் இடமாற்றம்: தொழிலாளர்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
06:34

சிவகாசி:சிவகாசியில் இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தொழிலாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக இ.எஸ்.ஐ., எனும் காப்பீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. 100 சதவீதம் தொழிலாளி மற்றும் தொழிலதிபர்கள் பங்களிப்புடன் செயல்படும் இந்நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியோ, தொண்டு நிறுவனம் உதவியோ இ.எஸ்.ஐ., க்கு கிடையாது. இதை நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தாலும், தொழிலாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் ஒப்புதலுடன்தான் இ.எஸ்.ஐ., யில் எந்த மாற்றமும் செய்ய வேண்டும். ஆனால் சிவகாசியில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தை ரிசர்வ் லைனில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இ.எஸ்.இ., யில் பங்குதாரர்களாக உள்ள தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் அனுமதி பெறாமல் இடம் மாற்றம் செய்ய உள்ளது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இப்பகுதிக்கு முறையான பஸ் வசதி கூட இல்லாத நிலையில் இ.எஸ்.ஐ., மருந்தகத்தில் சிகிச்சை பெற்று அதற்காக அளிக்கப்பட்ட விடுமுறை சம்பளத்திற்காக தொழிலாளர்கள் 3 கி.மீ., தொலைவு அலைய வேண்டியது வரும் என்கின்றனர் தொழிலாளர்கள். இதை கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்.போராடும் நிலை வரும்போலீஸ் காலனியில் ஒரே கட்டடத்தில் இ.எஸ்.ஐ., மருந்தகம், அலுவலகம் செயல்படுகிறது. தொழிலாளர்கள் ஒவ்வொரு தேவைக்கும் அலைய கூடாது என்பதற்காக அரசே இப்படித்தான் செயல்படுகிறது. இதை மீறி அதிகாரிகள் செயல்படுவது தொழிலாளர்களை சிரமத்திற்கு ஆளாக்கின்றனர். அலுவலகத்தை இட மாற்றம் செய்தால் தொழிலாளர்கள், நிறுவனங்கள், போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும்.சிவேஷ் பிரபு, தொழிலாளர் நல ஆர்வலர், சிவகாசி.இட மாற்றம் செய்யாதீர்1952 லிருந்து சிவகாசியில் ஒரே இடத்தில்தான் மருந்தகம், அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இட வசதியும் அதிகம் என்பதால் தொழிலாளர்களுக்கு வசதியாக இருந்தது. இதை இட மாற்றம் செய்தால் அனைவரும் சிரமப்பட வேண்டி வரும். பணப்பட்டுவாடா அலுவலகத்தை இட மாற்றம் செய்ய கூடாது.பாண்டியராஜன், தொழிலதிபர்,சிவகாசி.ஆலோசனை கேட்காது மாற்றம்தொழிலாளர்கள் அலைய கூடாது என்பதற்காகதான் அலுவலகமும் , மருந்தகமும் ஒரே இடத்தில் செயல்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே இப்படித்தான் செயல்படுகிறது. ஆனால் இங்கு தொழிலாளர்களிடம் அனுமதி கேட்காமலே மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.கிருஷ்ணன், தொழிலாளி, சிவகாசி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X