| இன்ஜினியரிங் படித்தால் , இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் பேச்சு Dinamalar
இன்ஜினியரிங் படித்தால் , இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
23:45

கடலுார்: இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சேர்மன் ஸ்ரீராம் கூறினார். கடலுாரில், நடந்த 'தினமலர் நாளிதழ்' 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சேர்மன் ஸ்ரீராம் பேசியதாவது:இன்ஜினியரிங் படிப்பை முடித்து வெளியே வரும் போது, வேலை கிடைக்காது என்று கூறுகின்றனர். அதே சமயம் தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த கம்பெனிகளுக்கு திறமையான மாணவர்கள் கிடைப்பதில்லை. பிளஸ் 2 படிப்பில் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்றால் வேலை கிடைக்காது. வேலைக்கு சேர்ந்த பிறகு நிர்வாகம் தரும் வேலைகளுக்கு தீர்வு காணும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். டாக்டருக்கு படித்தால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்கின்றனர். அதையும் தாண்டி இன்ஜினியரிங் படித்தால் சம்பாதிக்கலாம்.இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற கடின உழைப்பு வேண்டும். எந்த கல்லுாரி எதிர்காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X