| ஆன் லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிமுறை, கோவை உதவி பேராசிரியர் மாணவர்களுக்கு ஆலோசனை Dinamalar
ஆன் லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிமுறை, கோவை உதவி பேராசிரியர் மாணவர்களுக்கு ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
23:46

கடலுார்: இன்ஜினியரிங் ஆன் லைன் கவுன்சிலிங் விதிமுறைகளின் படி, பதிவு செய்யப்படும் பாடப்பிரிவுகள் அடிப்படையில், முன்னுரிமை வழங்கப்படும் என, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி உதவி பேராசிரியர் ஆலோசனை வழங்கினார். கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த உங்களால் முடியும் நிகழ்ச்சியில் கோவை தொழில் நுட்பக் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில்வேல் பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்படும். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில், 170 முதல் 200 வரை ஒரு குழுவாகவும், 140 முதல் 169 வரை ஒரு குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவை சேர்ந்தவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது மற்றக் குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மாணவர்கள் கவுன்சிலிங் டிபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.ஒரு மாணவர் எத்தனை பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம். முதலாவதாக தேர்வு செய்யப்படும் பாடப்பிரிவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆன் லைன் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்ட பாடப்பிரிவு தேர்வு செய்ய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். மூன்றாவது நாள் மாலை 5 மணி வரை பாடத் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். தேர்வை ஊர்ஜிதம் செய்த பின்னர் ஆன் லைனில் லாக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ரேங்க் பட்டியல் மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கப்படும். டி.என்.இ.ஏ.,வின் ஆன் லைன் கவுன்சிலிங் தேர்வை பிரின்ட் அவுட் எடுத்து சென்று, கல்லுாரியில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சேர வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சென்றால், இட ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் இல்லை.கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் கல்லுாரியில் சேரும் போது, டிபாசிட் தொகையை கழித்து கல்லுாரி கட்டணத்தை செலுத்த முடியும். கல்லுாரியின் தரத்தை வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X