| தேவையானதை படித்தால் வேலை கிடைக்கும், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி 'அட்வைஸ்' Dinamalar
தேவையானதை படித்தால் வேலை கிடைக்கும், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி 'அட்வைஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
23:47

கடலுார்: திறமையை பொறுத்தே வேலை கிடைக்கும் என, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார். கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த 'தினமலர்' நாளிதழ் உங்களால் முடியும் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:மாணவ, மாணவியருக்கு இன்ஜினியரிங் படிப்பில் சேரலாமா அல்லது கலை பாடப்பிரிவில் சேரலாமா என்ற குழப்பம் இருக்கும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு இன்ஜினியரிங் படிப்பு தேவை. இன்ஜினியரியங் படிப்பில் பாடங்கள் தாண்டி படித்தால் வேலை நிச்சயம் கிடைக்கும்.கடந்த காலங்களில் 100 வேலைகளில் 71 வேலைகளை மனிதர்கள் செய்தனர். 29 வேலைகளை இயந்திரங்கள் செய்தன. அடுத்த 6 ஆண்டுகளில் 100 வேலைகளில் 51 வேலைகளை மட்டுமே மனிதர்கள் செய்வர். மீதமுள்ள 49 வேலைகளை இயந்திரங்கள் செய்யும். தற்போது, 100ல் 32 வேலைகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில் 76 வேலைகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும். டெக்னாலஜி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.முந்தைய காலத்தில் மனிதனுக்கும், மனிதனுக்கும் போட்டி இருந்தது. தற்போது, இயந்திரங்களோடு வேலை செய்யப் போகிறோம். திறமையை பொறுத்தே வேலை கிடைக்கும். படித்தால் வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் நினைக்கின்றனர்.ஆனால், தேவை என்ன என்பதை புரிந்து படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். இன்ஜினியரிங் முடித்து வெளியே வரும் போது, 70 சதவீத வேலைவாய்ப்புகள் போட்டி மூலமாகவே நிரப்பப்பட உள்ளது. எந்த கோர்ஸ் (பாடப்பிரிவு) என்பதை தேர்வு செய்வது முக்கியம்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X