கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:27

செஞ்சி: செஞ்சி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தாசில்தார் ஆதிபகவன் செய்திக்குறிப்பு:செஞ்சி தாலுகாவில் அணையேரி, அஞ்சாஞ்சேரி, எடமலை, இல்லோடு, கடம்பூர், கல்லாலிப்பட்டு, கள்ளப்புளியூர், காரியமங்கலம், கொரவனந்தல், மணியம்பட்டு, மரூர், மேலத்திப்பாக்கம், மேல்கூடலுார், மேல்ஒலக்கூர், நெகனுார் ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இதற்கான விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை செஞ்சி தாலுகா அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வழங்க வேண்டும். இதற்கென ஒதுக்கீடு செய்துள்ள பட்டியலின் படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.2019 ஜனவரி 1ம் தேதி அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் முஸ்லிம்கள் 32 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரருக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும், பணி நியமனம் செய்யும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ., துாரத்திற்குள் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, ஜாதிச்சான்று, வருவாய்ச்சான்று, இருப்பிடசான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X