| மழை வேண்டி வருண பூஜை Dinamalar
மழை வேண்டி வருண பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:28

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உலக நன்மை வேண்டி வருண பூஜை நடந்தது.மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த பூஜைக்கு ஆலையின் தலைவர் அரசு தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் அனுசுயாதேவி முன்னிலை வகித்தனர்.வேதார்த்திகள் தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி, ஸ்ரீவருணசாந்தி ஜப மகா யாகம் செய்தனர். காலை 6:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை நடந்தது.நிகழ்ச்சியில் தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுவலக மேலாளர் திருவேங்கடம், கணக்கு அலுவலர் சம்பந்தன், துணை ரசாயனர் சீனுவாசன், மனோகர், நிர்வாககுழு துணைத் தலைவர், நிர்வாககுழு உறுப்பினர்கள், விவசாய சங்க பிரிதிநிதிகள், ஆலையின் அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், அனைத்து துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X