| நடைபாதையில் கடை வைக்க முறையீடு: கைவிரித்த டி.எஸ்.பி., Dinamalar
நடைபாதையில் கடை வைக்க முறையீடு: கைவிரித்த டி.எஸ்.பி.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:33

திண்டிவனம்: நெடுஞ்சாலை நடைபாதையில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்கும்படி வியாபாரிகள் டி.எஸ்.பி.,யிடம் கோரிக்கை விடுத்தனர்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி, நேருவீதி, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.அதன்படி நகராட்சி நிர்வாகம், சந்தைமேடு, வண்டிமேடு, திரவுபதி அம்மன் கோவில் திடல், காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகிய நான்கு இடங்களில் கடைகள் வைப்பதற்காக இடம் தேர்வு செய்து, 633 பேருக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கிடையே, நடைபாதை வியாபாரிகள் நகராட்சி சார்பில், ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு செல்லாமல், பழைய இடத்திலேயே தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து நடத்தப்பட்ட கடைகள் கோர்ட் உத்தரவின்படி போலீசார் அப்புறப்படுத்தினர்.இதற்கிடையில் அண்ணா நடைபாதை சிறு வியாபாரிகள் நல சங்கத்தினர் தலைவர் நசீர் அகமது தலைமையில் திண்டிவனம் டி.எஸ்.பி., கனகேஸ்வரியை சந்தித்து, சந்தைமேட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை. தற்போதுள்ள நடைபாதையிலேயே கடைகளை தற்காலிகமாக வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனு கொடுத்து முறையிட்டனர்.அதற்கு, டி.எஸ்.பி., நடைபாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது. அப்படி கடைகள் வைத்தால் அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஏமாற்றத்துடன் வியாபாரிகள் சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X