அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்க மோடி கறார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 ஜூன்
2019
05:55
பதிவு செய்த நாள்
ஜூன் 16,2019 00:57

புதுடில்லி: ''மத்திய அமைச்சர்கள், சரியான நேரத்துக்கு, அலுவலகத்துக்கு வர வேண்டும்; வீட்டில் இருந்து, வேலை பார்க்கக் கூடாது. அலுவலகத்துக்கு, ஒரு நாள் கூட, விடுமுறை எடுக்கக் கூடாது,'' என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அரசின் திட்டங்களை, பா.ஜ., - எம்.பி.,க்கள், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியுள்ள பிரதமர், எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளார்.


@Image@


லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது, பிரதமர் அலுவலகத்துக்கே, அதிகாரிகள் சரியான நேரத்தில் பணிக்கு வராதது தெரிய வந்தது. பிரதமர் மோடி, குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு செல்ல துவங்கினார். இதனால், அதிகாரிகளும், குறித்த நேரத்தில் வர துவங்கினர். இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் என்ற பெருமையும், மோடிக்கு கிடைத்தது.



இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலர், அவ்வப்போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளால், பிரதமர் மோடிக்கு, அடிக்கடி தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. மேலும், எதிர்க்கட்சி தலைவர்களை, பா.ஜ.,வினர் தரக்குறைவாக விமர்சித்ததும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



எளிமை



இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இரண்டாவது முறையாக பிரதமராக மோடி, கடந்த மாதம், 30ல் பதவியேற்றார். இந்த வெற்றிக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தது

தான் காரணம் என, பிரதமர் மோடி நம்புகிறார். சில மாநிலங்களில் அடைந்த தோல்விக்கு, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையாதது தான் காரணம் எனவும் அவர் கருதுகிறார். அதனால், இம்முறை, நிர்வாகத்தில் எளிமையை கடைப்பிடிப்பதுடன், கறாராக இருக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.



சமீபத்தில், டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மோடி, அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.

அவர் பேசியது பற்றி, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சர்கள் அனைவரும், அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு, தினமும் வர வேண்டும். ஒருநாள் கூட, விடுமுறை எடுக்கக் கூடாது. அமைச்சர்கள் சரியாக செயல்பட்டால், அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுவர். வீட்டில் இருந்தே, அலுவலக பணிகளை, யாரும் மேற்கொள்ளக் கூடாது. வளர்ச்சி பணிகள், திட்டங்கள் பற்றி, இணை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும். தங்கள் துறைகளில், 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றிய அறிக்கையை, அமைச்சர்கள் தயாரிக்க வேண்டும்.



தர்ம சங்கடம்



அமைச்சர்கள், தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டும். அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு உள்ளது. சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சி தலைவர்களை, யாரும் விமர்சிக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் மட்டும் தான், நாம் விமர்சிக்க வேண்டும்.

இவ்வாறு, பிரதமர் கூறியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.



ஜெய்சங்கரின் சிக்கனம்



கடந்த ஆட்சியில், வெளியுறவுத்துறை அமைச்சராக, பா.ஜ., மூத்த தலைவர், சுஷ்மா சுவராஜ் இருந்தார். இவர் வெளிநாடுகளுக்கு, விமானப்படையின் தனி விமானத்தில் செல்வதை, வழக்கமாக கொண்டிருந்தார். சுஷ்மாவின் உடல் நிலை கருதி, இதற்கு பிரதமர் மோடி அனுமதியளித்திருந்தார்.

இப்போது, வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர், தனி

விமானத்தில் பயணம் செய்வதில்லை. மற்ற பயணியருடன், சாதாரண விமானத்தில் தான் பயணம் செய்கிறார். இதற்காக, ஜெய்சங்கருக்கு, பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.



ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்த போது, தனக்கு அதிக பாதுகாப்பு வேண்டாம் என, கூறிவிட்டார். ஆனால், இப்போது ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்நாத் சிங், அதிக பாதுகாப்புடன் வளைய வருகிறார்.



அதிகாரிகள் கலக்கம்



அமைச்சர்கள், அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என, பிரதமர் உத்தரவிட்டுள்ளதை, உடனே செயல்படுத்தியவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். உள்துறை அமைச்சராக பதவியேற்றது முதல், அலுவலகத்துக்கு, தினமும் காலை, 9:30 மணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் அமித் ஷா. இரவு, 9:௦௦ மணிக்கு தான் வீட்டிற்கு செல்கிறார். அலுவலகத்திலேயே, மதிய சாப்பாட்டை சாப்பிடுகிறார்.இதனால், அதிகாரிகளும் குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து, இரவு, 9:௦௦ மணி வரை இருக்கின்றனர்.



மேலும், 'எந்த, 'பைலை'யும் வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது; அனைத்து பணிகளையும், அலுவலகத்திலேயே முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, அமித் ஷா உத்தரவிட்டார். கடந்த ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், தினமும் காலை, 11:30 மணிக்கு தான் அலுவலகத்துக்கு வருவார். மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு செல்வார், அதன் பின், அலுவலகத்துக்கு வரமாட்டார். ஆனால், இப்போது, பிரதமர் மோடி வழியில், அமித் ஷா

பணியாற்றுவது, அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201919:07:50 IST Report Abuse
chakra எந்த பிரயோஜனமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூன்-201914:16:36 IST Report Abuse
Pugazh V பதவியை பிடித்த பத்து நாட்களுக்குள் 4 நாடு களுக்கு ஊர் சுற்றி வர.சுற்றுலா போயிட்டு வந்துட்டு இந்த பிலிம் காட்டறாமாதிரி அல்லக்கை களைக் கொண்டு செய்திக்கட்டுரை எல்லா ப்ரஸ்ஸுக்கும் அனுப்பி போட வெச்சு பாஜக குண்..ஸாரி தொண்டர்களை ஜைன்ஜக் கருத்து போட வெக்கிறது அதிசயமான விஷயம் தான்
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
16-ஜூன்-201915:49:32 IST Report Abuse
Prabu.KTKபுகழ், உனக்கெல்லாம் வெக்கம், மானம் , ரோஷம் இதெல்லாம் துளி கூட கிடையாதா ? பிஜேபி யின் மோடி மாபெரும் வெற்றி பெற்றது மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு 5 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. இன்னும் 5வருசத்துக்குள்ளே திருந்துங்க, இல்லேன்னா மோடி ஏ பரவாலைன்னு நினைக்கர அளவுக்கு உத்தர பிரதேசத்திலிருந்து யோகின்னு ஒருத்தர் வருவார் ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-201911:30:01 IST Report Abuse
Pugazh Vதவறான முன்னுதாரணத்துடன் செயல்படுவதை விமர்சிப்பதற்கு வெக்கம் மானத்துக்கும் என்ன சம்பந்தமோ,...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஜூன்-201913:32:45 IST Report Abuse
தமிழ் மைந்தன் :" பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தமாதிரி "" என்ற பழமொழி ஒன்று உண்டு. அது போலவே ஓமனிலிருந்து மோடி ஆட்சியை பார்த்து ஒருவர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X