| பைக்கில் பயணித்த மூதாட்டி சாவு Dinamalar
பைக்கில் பயணித்த மூதாட்டி சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:57

புதுச்சேரி: மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.அரியாங்குப்பம் சண்முகாநகர், பக்தவச்சலம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,57; இவர், சம்பவத்தன்று தனது தாய், மனோரஞ்சிதத்தை,70; தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை, கொக்கு பார்க் சிக்னல் அருகே வந்த போது மனோரஞ்சிதம் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மனோரஞ்சிதத்தை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.விபத்து குறித்து போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X