பற்கள் தூய்மையாக இருந்தால் நோய்களை தவிர்க்கலாம்: கருத்தரங்கில் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
02:56

திருப்பரங்குன்றம்:''பற்களை துாய்மையாக வைத்திருந்தால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம்'' என பல் மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.




மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் இந்திய பல் மருத்துவ சங்கம் திருமங்கலம் கிளை சார்பில் 'இம்பாக்ட் 19' என்ற பல் மருத்துவம் தொடர்பான இரண்டு நாள் மாநில கருத்தரங்கு நேற்று துவங்கியது.கருத்தரங்கு சேர்மன் டாக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். டாக்டர்கள் சரவணன், யோகானந்த், தன்வீர் முகமது முன்னிலை வகித்தனர்.




அகில இந்திய பல் மருத்துவ சங்க பொதுச்செயலாளர் டாக்டர் அசோக் டோபிள் பேசியதாவது: பல் மருத்துவத்தில் தற்போது அதி நவீன, விரைவான சிகிச்சை முறைகள் வந்து விட்டன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பல நோய்களின் அறிகுறிகளை வாயின் மூலம் அறியலாம். புற்றுநோய்க்கு காரணம் புகையிலை, பான்பராக், குட்கா பயன்படுத்துவது தான். பற்களை துாய்மையாக வைத்திருந்தால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம் என்றார்.




கண்காட்சியில் நவீன ஸ்கேனர், முப்பரிமாண பிரின்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பல் மட்டுமின்றி உடலில் சேதமடைந்த பாகங்களை அதன் முழு வடிவில் விரைவாக தயாரித்து இணைக்க முடியும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X