பலி வாங்கும் டி.வி.எஸ். நகர் பாலம் 3 ஆண்டுகளில் 3 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
03:02

மதுரை:மக்கள் வரிப்பணத்தை வீணடித்துகட்டப்பட்ட மதுரை டி.வி.எஸ். நகர் பாலம், பலி வாங்கும் பாலமாக மாறி வருகிறது. நேற்று டூவீலரில் வந்த பாலாஜி 25, பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார். மூன்று ஆண்டுகளில் 3 பேரின் உயிரை பறித்துள்ளதுஇப்பாலம்.




டி.வி.எஸ். நகர் ரயில்வே கேட்அடிக்கடி மூடப்பட்டதால் ஏற்பட்டபோக்குவரத்துநெரிசலை கருத்திற்கொண்டு தரைப்பாலத்துடன் கூடிய மேம்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதற்கேற்ப தொலை நோக்கு பார்வையுடன் அமைக்காமல் கமிஷனுக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து 'ஒய்' வடிவில் கட்டப்பட்டது.



தற்போது பழங்காநத்தம் மாடக்குளம் ரோட்டில் இருந்துடி.வி.எஸ். நகருக்கு செல்வதற்கு மட்டுமே பாலம் பயன்படுகிறது. இப்பாலத்தில் இருந்து வெங்கடாஜலபுரத்திற்கு செல்ல வேண்டிய
பகுதியில் பாலம்பணி முற்று பெறாமல் 'திரிசங்கு' நிலையில் காட்சியளிக்கிறது.அதேசமயம்

பாலத்தில் வருவோர் வெங்கடாஜலபுரம்பகுதிக்கான தடுப்புச்சுவரையொட்டி வளைந்து சென்றுதான் டி.வி.எஸ்., நகருக்கு செல்ல வேண்டும்.




டூவீலரில் வேகமாக வரும்போது இரண்டரை அடி உயர தடுப்புச்சுவர் மீது மோதாமல் இருக்க 'ஸடன் பிரேக்'போட்டாலோஅல்லது சுவர் மீது மோதினாலோ, தடுப்புச்சுவர் உயரம் குறைவாக

இருப்பதால் 60 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறப்பது தொடர்கிறது. கடந்த மூன்றுஆண்டுகளில் கல்லுாரி மாணவர், கொத்தனார் பலியான நிலையில் நேற்று லேமினேஷன் கடை ஊழியர் பாலாஜி தவறி விழுந்து இறந்தார்.




மதுரை ஜீவாநகரைச் சேர்ந்த இவர் நேற்று பகல் 1:30 மணிக்குசாப்பிடுவதற்காகடூவீலரில் வீட்டிற்கு சென்றபோது தடுப்புச்சுவர் வளைவின் மீது மோதி கீழே தவறி விழுந்து இறந்தார்.தொடர்ந்து உயிர்கள் பலியாகுவதால்தடுப்புச்சுவரை உயர்த்தி அமைக்க பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு சுப்பிரமணியபுரம் போலீசார் கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாததால்

டி.வி.எஸ். நகர் பாலம் பலி வாங்கும் பாலமாக மாறிவிட்டது.



அன்றே சொன்னது தினமலர்



இந்த பாலத்தால் மக்களுக்கு பயனில்லை;பாலத்தின் வடிவமைப்பும் சரியில்லை என்று
பாலம் கட்டப்படும் போதே தினமலர் எழுதியது. இப்போது பாலம் வாகனம் நிறுத்துமிடமாகவும், குப்பை குவிக்கும் இடமாகவும், உயிர் பலிவாங்கும் பகுதியாகவும் மாறிவிட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X