ஆவணப்படுத்தப்படும் சொத்துக்கள்: போலி பத்திரம் தயாரித்து விற்பதை தடுக்க முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
03:35

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளில், நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.கோவை நகர்ப்பகுதியில், பொது ஒதுக்கீடு இடங்களாக ஒதுக்கப்பட்ட பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. 'ரிசர்வ் சைட்'டுகளை கண்டறிந்து, உட்பிரிவு செய்து, மாநகராட்சி ஆணையாளர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து, ஆவணப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், 'ரிசர்வ் சைட்' விவரங்களை, 'ஜியோ டேக்' முறையில் ஆவணப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.அடுத்தகட்டமாக, குளங்கள், மாநகராட்சி பள்ளிகள், சந்தை வளாகம், குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை, சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், ரோடு, தானமாக கொடுத்த இடங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், கழிப்பறைகள், மயானங்கள், நுாலகங்கள், கிணறு மற்றும் பம்ப்பிங் அறைகள், சமுதாய கூடங்கள், பஸ் ஸ்டாண்ட்டுகள், மாநகராட்சி அலுவலகங்கள், மழை நீர் வடிகால், நீர் வழிப்பாதை, குடிநீர் தொட்டிகள் மற்றும் பம்ப்பிங் ஸ்டேஷன் அமைவிடங்கள் உள்ளிட்ட, மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து விதமான சொத்துக்களையும் ஒன்று விடாமல், ஆவணப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது..


ஒவ்வொரு வார்டுக்கும் சம்பந்தப்பட்ட உதவி/ இளம் பொறியாளர், சர்வேயர் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர்கள் இணைந்து, அதற்கான ஆவணங்களை தயார் செய்து, வார்டு, பிளாக் எண், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரிக்க வேண்டும். அனைத்து சொத்துக்களையும் மாநகராட்சி கமிஷனருக்கு உட்பிரிவு செய்து, பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய, நகரமைப்பு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இனி, போலி ஆவணம் தயாரித்து, அரசு சொத்துக்களை யாருக்கும் விற்க முடியாது.


இது, நல்ல முயற்சி!மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அரசு சொத்துக்களை காப்பாற்றுவதற்கான நல்ல முயற்சி. போலி ஆவணங்கள் தயாரித்து யாருக்கும் விற்கவும் முடியாது; ஏமாற்றவும் முடியாது. பத்திரப்பதிவு செய்யும்போது, காட்டிக் கொடுத்து விடும். 'ரிசர்வ் சைட்' விவரங்களை 'ஜியோ டேக்' முறையில் ஆவணப்படுத்தும்போது, எங்கெங்கு ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது என்பதை எளிதாக கண்டறியலாம். அந்நிலத்துக்கான ஆவணங்களை எடுத்து, சம்பந்தப்பட்டோரிடம் விசாரித்து, நிலத்தை கையகப்படுத்தலாம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X