கலெக்டர், டி.ஆர்.ஓ., பணியிடம் நிரப்புவதில் அரசியல் தலையீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
03:49

மதுரை:மதுரையில் 40 நாட்களுக்கு மேலாக டி.ஆர்.ஓ., 20 நாட்களாக கலெக்டர் பணியிடங்கள் அரசியல் தலையீட்டால் நிரப்பப்படாமல் உள்ளன.




ஓட்டு இயந்திர அறையில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில், கலெக்டர் நடராஜன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பொறுப்பேற்ற நாகராஜன், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அங்கன்வாடி பணியிடங்களை சிபாரிசிற்கு இடம்தராமல் நேர்மையாக நிரப்பினார். அதனால் அதிருப்தியடைந்த ஆளும் கட்சியினர் அவரை மாற்ற கோரியதால் மே 27 ல் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் கலெக்டர் நியமிக்கப்படாமல், பொறுப்பு டி.ஆர்.ஓ.,வுக்கு கலெக்டர் பொறுப்பு வழங்கப்பட்டது.




மதுரை டி.ஆர்.ஓ., குணாளன் ஏப்., 30 ல் ஓய்வு பெற்றது முதல் அப்பணியிடம் காலியாக உள்ளது. கலால் துறை இணை கமிஷனர் சாந்தகுமார் டி.ஆர்.ஓ., பொறுப்பை கவனித்து வந்தார். அவர் கலெக்டர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பதால் அவருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் இல்லாததால் முக்கிய முடிவுகள் எடுக்க தாமதமாகிறது. டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில் நிலம் சார்ந்த வழக்குகள் விசாரிக்கப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது.இப்பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.





இந்த இரு பதவிகளிலும் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஆளும் கட்சியினர், முதல்வர் அலுவலகத்தில் சிபாரிசு செய்துள்ளனர். இதனால் நியமனம் தள்ளிப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
16-ஜூன்-201915:06:28 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM மாவட்டத்திற்கு சிறந்த நிர்வாகம் வேண்டுமா அல்லது அரசியல் வாதிகளுக்கு அடங்கிய நிர்வாகம் வேண்டுமா. அரசியல் குறுக்கீடு லஞ்சம் இவை இரண்டும் நீங்கினால்தான் நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
16-ஜூன்-201904:27:20 IST Report Abuse
Jagath Venkatesan பணியிடம் நிரப்புவதில் அரசியல் தலையீடு....அப்போ ...மற்றதில் எல்லாம் அரசியல் தலையீடு இல்லியா ....கரையான் எல்லாத்தையும் அரிக்கும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X