| பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் Dinamalar
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
03:50

மதுரை:'பள்ளிகள் துவங்கி 2 வாரங்கள் ஆகியும் பாடப்புத்தகங்கள் வழங்காதது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. புதிய பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.




சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலர் ஒச்சுக்காளை வரவேற்றார். மாநில பொதுச்செயலர் மயில் பேசினார்.




தீர்மானங்கள்




புதிய பாடப்புத்தகங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. - யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உபரியாக இல்லாத ஆசிரியர்களை நியமிக்கின்றனர். அங்கு இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணமாக கூறி கிராமப்புற அரசுப் பள்ளிகளை மூடுவது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். அப்பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்துக்கூற காலக்கெடுவை
3 மாதங்களாக நீட்டிக்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத 1500 இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.துணைப் பொதுச்செயலர் கணேசன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X