மதுரை:மதுரை பெசன்ட்ரோடு காஞ்சி காமகோடி பீடத்தில் சொற்பொழிவு நடந்தது. மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
'குருமகிமை' தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசியதாவது:உலகில் மிகப்பெரியது நவக்ரஹ இயக்கம். மனித ஜென்ம வாழ்க்கை அதன்படியே நடக்கிறது. சூரியன், சந்திரன் சாதகமற்ற நிலையில் இருந்தால் தாய், தந்தையரை பாதிக்கும். புதன் சாதக நிலை புத்தி வலிமையை கொடுக்கும்.