| விதியை மீறும் வாகன ஓட்டிகள் :போத்தனூரில் விபத்து அபாயம் Dinamalar
விதியை மீறும் வாகன ஓட்டிகள் :போத்தனூரில் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
04:04

போத்தனுார்:போத்தனுாரில், வழி மாறி வரும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.போத்தனுாரில் ரயில்வே கல்யாண மண்டபம் முன் துவங்கி, வெள்ளலுார் பிரிவு வரை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சர்ச் ரோட்டில் இருந்து சாரதா மில் ரோட்டுக்கு வரும் வாகனங்கள், மேம்பாலத்தின் இடதுபுற சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்; இதுகுறித்த அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.


சாரதா மில் ரோட்டில் இருந்து மேம்பாலத்தின் மேல் செல்ல, ரவுண்டானா போல், கான்கிரீட் மையத்தடுப்பு அமைக்கப்பட்டு, இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள், சர்ச் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நுழைந்து, சாரதா மில் ரோடு நோக்கி திரும்புகின்றன.மேம்பாலம் மற்றும் சாரதா மில் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களுடன், தவறான பாதையில் வரும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ இயக்குவோர் விதிமீறுகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X