மங்கலத்தில் மீண்டும் அதிரடி: 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மங்கலத்தில் மீண்டும் அதிரடி: 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
04:55

திருப்பூர்:மங்கலம் ஊராட்சியில் நேற்று நடந்த சோதனயில், 300 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.பி.டி.ஓ.,கள் கனகராஜ், மகுடேஸ்வரி ஆகியோர் தலைமையிலான குழுவினர், திருப்பூர் ஒன்றிய ஊராட்சிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மங்கலம் ஊராட்சியில், ஏற்கனவே இருமுறை ஆய்வு நடத்தி, 500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.


நேற்றும், நால்ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் ஆய்வு நடந்தது.கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 'ஒன்யூஸ்' பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன் காகிதங்கள், உணவு பொருள் பேக்கிங் செய்யும் கவர்கள் என, 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளில், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் வைத்திருந்த கடைகளுக்கு, 500 முதல், 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.


பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில்,''ஓன்றியம் முழுவதும், பிளாஸ்டிக் ஒழிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஊராட்சி குழுவினர், தொடர்ந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மங்கலம் ஊராட்சி பகுதிகளில் நடந்த ஆய்வின், 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 21 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X