| அடிக்கடி ஏற்படும் மின்தடை: தொழில்துறையினர் பாதிப்பு Dinamalar
அடிக்கடி ஏற்படும் மின்தடை: தொழில்துறையினர் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
04:56

திருப்பூர்;திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், பின்னலாடை உற்பத்தி, நுால் மில்கள், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் என, ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அதன்படி, மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


ஆனால், கடந்த சில நாட்களாக, திருப்பூர் மற்றும் அவிநாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுகிறது. தொடர்ந்து, பல நேரம் நீடிக்கும் மின்சாரத் தடையால், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தோர் மிகவும் பாதிக்கின்றனர். பொதுமக்களும் பரிதவிப்புக்கு உள்ளாகின்றனர்.தொழில்துறையினர் கூறியதாவது:பின்னலாடை நிறுவனங்களில், நவீன இயந்திரங்கள் வருகைக்கு பின், அனைத்தும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு சில பின்னலாடை நிறுவனங்கள், முழுவதும் குளிருட்டப்பட்ட அறைகளில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தொழில்துறையினரின் புகார் குறித்து, மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கூறுகையில், 'மின் பற்றாக்குறை, மின் வெட்டு பிரச்னை தற்போது இல்லை. மாறாக, மாதாந்திர பராமரிப்பு பணியின்போது மட்டுமே மின்சாரம் தடை செய்யப்படுகிறது.அதே நேரம், பலத்த மழை, சூறாவளி காற்று போன்ற காரணங்களால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை நுணுக்கமாக கண்டறிய வேண்டியுள்ளது. இதனால், சீரமைப்பு பணி, சற்று காலதாமதமாகிறது,' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X