பலன் தரும் பழவகை மரக்கன்று நட முடிவு: 'வனத்துக்குள் திருப்பூர் - 5' திட்டம் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
04:58

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர்-5 திட்டம், நேற்று துவங்கியது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவை போற்றும் வகையில், திருப்பூர் மாவட்ட பசுமை ஆர்வலர்கள் இணைந்து, மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் துவக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பெயரில், 2015ல் துவங்கிய திட்டத்தில் இதுவரை, நான்கு கட்டமாக, 6.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.இதுவரை, நான்கு திட்டங்கள் மூலம், அரசு நிலம், குளம், குட்டை, அணைகள், தனியார் நிலம், விவசாய நிலங்களில், மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர்விட்டு பராமரிக்கின்றனர். பசுமை பயணத்துக்கு முடிவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், நேற்று, 'வனத்துக்குள் திருப்பூர்-5' திட்டம் துவங்கியது.காங்கயம், அகிலாண்டபுரம், கோட்டமேடு பகுதியில் உள்ள, ஸ்ரீசஞ்சீவராயர் கோவில் நிலத்தில், மரக்கன்றுகளை நட்டு, 5வது திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டுடன், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.கோவில் நிர்வாகிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், காங்கயம் துளிகள், வெள்ளகோவில் வேர்கள் அமைப்பு, 'டிரீம் -20 ' அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.திட்டக்குழு தலைவர் சிவராம் கூறுகையில், ''நான்கு திட்டங்களில், நாட்டு வேம்பு, நாவல், புங்கன், இலுப்பை, நாட்டு வாகை, துாங்குவாகை, மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; செழிப்பாக வளர்ந்துள்ளன. ஐந்தாவது திட்டத்தில், பலாமரம், செம்மரம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. பறவைகள் பயன்பெறும் வகையில், கொடுக்காபுளி மரக்கன்றுகளும் நடப்படும்.இத்திட்டத்தில், சொட்டுநீர் பாசன கட்டமைப்பை ஏற்படுத்தும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், சொட்டுநீர் பாசன கட்டமைப்பை அமைக்கலாம். அதற்கு பிறகு, மரக்கன்றுகள் இலவசமாக நட்டுத்தரப்படும்,'' என்றார்.மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90474 86666 என்ற எண்களில் மகேந்திரனை தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.சிறுவனுக்கு மரியாதைகாங்கயத்தை சேர்ந்த நாச்சிமுத்துவின் மகன் பொன் வெங்கடாசலபதி. நெய்க்காரன்பாளையம் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர், வீட்டில், நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இதன்மூலம், ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.சிறுவனின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர்-5 திட்டத்தில், மாணவர் பொன்வெங்கடாசலபதி, மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார். வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், மாணவனை பாராட்டி, கவுரவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X