போலீஸ் டைரி...//./,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
05:30

மொபைல் பறித்தவன் கைது


குரோம்பேட்டை: கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர், ஜேம்ஸ் பிரபாகர், 48. நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவன், ஜேம்ஸ் பிரபாகரனின் மொபைலை பறித்து சென்றான். விசாரித்த குரோம்பேட்டை போலீசார், சேலையூரைச் சேர்ந்த லோகேஷ், 21, என்பவனை, கைது செய்தனர். அவனிடம் இருந்து, இருசக்கர வாகனம், மூன்று மொபைல்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஊழியரை தாக்கியவன்கள் கைது


அண்ணாசாலை: வேளச்சேரி, டி.என்.எச்.பி., காலனியைச் சேர்ந்தவர், சுந்தரபாண்டி, 28. ராயப்பேட்டை, வெஸ்ட் காட் சாலையில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'கில், காசாளராக பணி புரிகிறார். மார்ச், 16ம் தேதி, பெட்ரோல், 'பங்க்'கிற்கு வந்த, மூவர், சுந்தரபாண்டியை, தாக்கி தப்பினர். விசாரித்த அண்ணாசாலை போலீசார், ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன், 23, ஆகாஷ், 21, முகமது கசிம், 21, ஆகியோரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


நேபாளத்தை சேர்ந்தவன் கைது


அயனாவரம்: அயனாவரத்தைச் சேர்ந்த, 22 வயது பெண், 12ம் தேதி இரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, மர்ம நபர் தொடுவதை உணர்ந்த பெண், கூச்சலிட்டார். இதில், அந்த நபர் தப்பினான். அயனாவரம் போலீசாரின் விசாரணையில், நேபாளத்தைச் சேர்ந்த ரூபேஷ் போரா, 20, என்பவன், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவன் இரண்டு மாதங்களாக, அயனாவரத்தில் உள்ள ஓட்டலில், பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


காவலாளி கொலையில் மூவர் கைது


அமைந்தகரை: அமைந்தகரை, எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர், பாண்டுரங்கன், 72; 'அம்மா' உணவக காவலாளி. அதே பகுதியைச் சேர்ந்த அமுதா, 63. இருவருக்கும், 9ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், பாண்டுரங்கன் அமுதாவை, திட்டியதாக கூறப்படுகிறது. 10ம் தேதி, அமுதாவின் மகள் ஆர்த்தி, நாகமணி, பக்கத்து வீட்டுக்காரர் சோலைமுத்து ஆகியோர், பாண்டுரங்கனை தாக்கி உள்ளனர். இதில், படுகாயமடைந்த பாண்டுரங்கன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு, நேற்று இறந்தார். அமைந்தகரை போலீசார் கொலை வழக்கு பதிந்து, ஆர்த்தி, நாகமணி, சோலைமுத்து ஆகியோரை, கைது செய்தனர்.


ஆண்கள் விடுதியில் திருட்டு


வேளச்சேரி: வேளச்சேரி, ராம்நகரில், கோல்டன் என்ற ஆண்கள் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மின் தடை ஏற்பட்டதால், அங்கு தங்கியோர், கதவை திறந்து வைத்து துாங்கி உள்ளனர். காலையில் பார்த்தபோது, நான்கு பேரின், இரண்டு லேப் - டாப், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


பூட்டை உடைத்து 22 சவரன் கொள்ளை


வேளச்சேரி: வேளச்சேரி, விஜயநகர், 11வது தெருவைச் சேர்ந்தவர், ராமமூர்த்தி, 69. சில தினங்களுக்கு முன், குடும்பத்துடன், ஐதராபாத் சென்றார். நேற்று, வீடு திரும்பிய போது, பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 22 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


ஓட்டுனரை வெட்டிய நால்வர் கைது


ஆவடி: ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன், 22; தனியார் நிறுவன ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, ஆவடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், வேனில் இருந்து, பொருட்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது, நால்வர் அவரை சூழ்ந்து, கத்தியால் தாக்கினர். இதில் அவருக்கு, தலையிலும், முகத்திலும், பலத்த காயம் ஏற்பட்டது. ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த ஆவடி போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஆவடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த விஜய், 23, என்பவன் உட்பட, நால்வரை கைது செய்தனர்.


'ஹான்ஸ்' பதுக்கிய ஒருவன் கைது


சூளைமேடு: சூளைமேடு, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூளைமேடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், சூளைமேடு, அமீர்ஜான் தெருவில் உள்ள வீட்டில் இருந்து, 4,000 பாக்கெட் ஹான்ஸ், குட்கா உள்ளிட்டவை, பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, சீனிவாசன், 48, என்பவனை, போலீசார் கைது செய்தனர்.


விபசார தரகர்கள் இருவர் கைது


வடபழனி: வடபழனியில், விபசார தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம், கண்காணிப்பில் ஈடுபட்டனர். குமரன் காலனி பிரதான சாலையில் உள்ள வீட்டில், சிலர், பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்துவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபசார தரகர்கள், சிவகங்கையைச் சேர்ந்த மணி, 63, முகலிவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், 33, ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, வடமாநில பெண்கள் இருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான, பாண்டியன் மற்றும் அலிமாபானு ஆகியோரை, தேடி வருகின்றனர்.


பெண்ணிடம் நகை பறிப்பு


கொரட்டூர்: கொரட்டூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர், விஜயராஜன். அவரது மனைவி செல்வி, 28. நேற்று மாலை, 4:30 மணி அளவில், வீட்டருகே மளிகை கடையில் பால் வாங்க சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரது, 4 சவரன் செயினை பறித்து தப்பினர். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X