| மழைநீர் குழாய் பணி நிறுத்தம்: மலைப்பாதையில் திண்டாட்டம் Dinamalar
மழைநீர் குழாய் பணி நிறுத்தம்: மலைப்பாதையில் திண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
07:09

வால்பாறை:வால்பாறையில், ரோட்டில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையில் பாலத்தில் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.வால்பாறை மலைப்பகுதியில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், தடுப்புச்சுவர் இடிந்தும் சேதம் ஏற்பட்டது.மழை பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறைக்கு வரும் வழியில், பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச்சுவர் மற்றும் சிறிய பாலம் விரிவுபடுத்தும் பணியும் நடக்கிறது.மழை காலங்களில், ரோட்டில் தண்ணீர் தேங்காமலும், மழை நீர் சேமிக்கும் விதமாகவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய பாலத்தின் மத்தியில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.அட்டகட்டியில் இருந்து, வால்பாறை செல்லும் வழியில் ரொட்டிக்கடை பகுதியில், குழாய் அமைக்க சிறு பாலம் விரிவுபடுத்தும் பணி துவங்கியது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மழை தீவிரமடையும் முன், பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X