பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், குழாய் உடைந்து குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வலியுறுத்தும் நிலையில், குழாய் உடைப்பை சீரமைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.பொள்ளாச்சியில், ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி,
மயிலாடுதுறை அருகே, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிகள், 38 கிராமங்கள் பயன்பெறும் வகையில், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன.ஆனைமலை பகுதியில், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கென தனிக்குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.அம்பராம்பாளையம் அருகே, பொள்ளாச்சி நகராட்சிக்கான குடிநீர் திட்டம், மற்றும் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியம், பெரிய நெகமம், கிணத்துக்கடவு, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டங்கள் உள்ளன.குளத்துாரில், 295 கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம், ஆத்துப்பொள்ளாச்சியில், குறிச்சி, குனியமுத்துார் பகுதிக்கான குடிநீர் திட்டங்களும் உள்ளன.ரோடுகளில் பதித்து கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய்களில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தினமும், லட்சக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிறது.
இதனால், கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கிறது.நகராட்சிக்கு உட்பட்ட உடுமலை ரோடு மரப்பேட்டை பாலம், மகாலிங்கபுரம் டி.எஸ்.பி., அலுவகலம் அருகே, மேல்நிலை தொட்டிகளுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் போதும், குடிநீர் குழாய்கள் உடைவதும் தொடர்கதையாகியுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், உடைப்பை உடனே சீரமைப்பதில்லை. இதனால், குடிநீர் வீணாகசாக்கடையில் கலக்கிறது.முன்னெச்சரிக்கை தேவை!சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது. ஆனால், பொள்ளாச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையில், குழாய் உடைப்பை சீரமைக்காததால் குடிநீர் வீணாவதுடன் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.குடிநீர் வீணாவதை தவிர்க்கவும், மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, இங்கிருக்கும் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
முன்னெச்சரிக்கை தேவை!சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது. ஆனால், பொள்ளாச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையில், குழாய் உடைப்பை சீரமைக்காததால் குடிநீர் வீணாவதுடன் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.குடிநீர் வீணாவதை தவிர்க்கவும், மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, இங்கிருக்கும் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.