'அம்மா குடிநீர்' விற்பனை நிறுத்தம்: அலைமோதிய சுற்றுலா பயணிகள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'அம்மா குடிநீர்' விற்பனை நிறுத்தம்: அலைமோதிய சுற்றுலா பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
07:13

வால்பாறை:மலிவு விலையில் விற்கப்பட்ட அம்மாகுடிநீர் பாட்டில்கள் கிடைக்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் தாகம் தீர்க்க, தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'அம்மா குடிநீர்' விற்பனையை துவங்கினார்.ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்களும், சுற்றுலாபயணிகளும் அதிக அளவில் வாங்கி பயனடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, வால்பாறையில் உள்ள 'அம்மா குடிநீர்' விற்பனை நிலையத்தில் போதிய அளவு பாட்டில்கள் இருப்பு இல்லாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக, குடிநீர் பாட்டில்கள் வினியாகம் இல்லை.


இதனால், வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் மக்கள், கடைகளில் கூடுதல் விலை கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.'அம்மா குடிநீர்' விற்பனை துவங்கப்பட்டதில் இருந்து, பஸ் ஸ்டாண்டில், பொதுகுடிநீர் குழாய்கள் சரிவர பராமரிப்பதில்லை, குடிநீர் வினியோகமும் செய்வதில்லை.'அம்மா குடிநீர்' பாட்டில் விற்பனையும் திடீரென நிறுத்தப்பட்டதால், மக்கள் அவதிப்படுகின்றனர்


.வால்பாறை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், 'அம்மா 'குடிநீர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வால்பாறைக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் பாட்டில்கள் சப்ளை இல்லை. இருப்பு இருந்த பாட்டில்கள் விற்பனையாகி விட்டது. புதிதாக குடிநீர் பாட்டில்கள் வந்த பிறகே, விற்பனை துவங்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X