| ஆரம்ப சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., மெஷின் வழங்கும் விழா Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., மெஷின் வழங்கும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
02:03

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் இ.சி.ஜி., மெஷின் வழங்கும் விழா நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்ற இ.சி.ஜி மெஷின் வழங்கும் விழாவிற்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அரசு தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் அனுசுயாதேவி முன்னிலை வகித்தனர். ஆலையின் நிர்வாக அலுவலர் திருவேங்கடம் வரவேற்றார். இந்த மெஷினை ஆலை தலைவர் அரசு, மேலாண்மை இயக்குனர் அனுசுயாதேவி ஆகியோர் சேர்ந்து புதுப்பட்டு வட்டார மருத்துவர் சம்பத்குமாரிடம் வழங்கினர். இதன் மூலம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இ.சி.ஜி., மெஷின் மூலம் பொதுமக்கள் இருதய நோய் உள்ளதா என அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து கண்டறியலாம். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பாலசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X