| வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக்க வலியுறுத்தல் Dinamalar
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:18

மதுரை : தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும். வரி விகிதங்களுக்கான வருமான வரம்புகள் சீர்திருத்தப்பட வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்திஉள்ளது.சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் ஆகியோர் மத்தியபட்ஜெட் முன் ஆலோசனையாக நிதியமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) விகிதங்கள் குறைக்கப்பட்டதால் அரசுக்கு வரி வருவாய் பெருகியுள்ளது.



வரிக்குறைப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். குறைவான வரி விகிதங்கள், முறையாக வரி செலுத்துவதை ஊக்குவித்து அரசின் வரி வருமானத்தை பெருகிட செய்யும் கலாசாரம் ஜி.எஸ்.டி., வரி முறையில் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., வரி விகித குழப்பங்கள் முற்றிலும் களையப்பட வேண்டும். முறையாக வரி செலுத்த ஏற்படும் செலவு அதிகம். அது குறைக்கப்பட வேண்டும்.ஜி.எஸ்.டி., கவுன்சிலில் அனைத்து மாநிலங்களிலுள்ள தொழில் வணிக துறையினருக்கு பிரதிநிதித்தும் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X