| பிளாஸ்டிக் மேட்டருக்கான செய்தி// மற்ற மாவட்டங்களுக்கு Dinamalar
பிளாஸ்டிக் மேட்டருக்கான செய்தி// மற்ற மாவட்டங்களுக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:19

ராமநாதபுரம் : கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு, '2019 ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் தமிழகத்தில் தடை செய்யப்படும்' என்று அறிவித்தது. புத்தாண்டில் இருந்து தடை உத்தரவு அமலுக்கும் வந்தது.துவக்கத்தில் போலீஸ், உள்ளாட்சி, வருவாய்த்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.



தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். ஓட்டல், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக், பாலிதீன் பபைகளை பறிமுதல் செய்தனர்.மக்களும் மனம் திருந்தி, கடைகளுக்கு செல்லும்போது பாத்திரங்கள், துணிப்பைகளை எடுத்துச் சென்றனர். நல்ல மாற்றம் உருவாகிக் கொண்டு இருந்த வேளையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.



அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தேர்தல் சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் ஆளும் கட்சி மீது அதிருப்தி உருவாகும் என்பதால் அரசின் பிடி தளர்ந்தது. விளைவு, தேர்தல் முடிவதற்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாடு தமிழகம் முழுவதுமே தாராளமாகிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பாலிதீன் பைகள் வீதிகள் தோறும் வீசப்படுகின்றன.நேற்று முதல் அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. என்றாலும் ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள் தாராளமாக புழங்கின.



அது தொடர்பான படங்கள்தான் நீங்கள் பார்ப்பது (நேற்று மலை 4:00 மணிக்கு எடுக்கப்பட்டவை). அரசு இன்னும் தீவிரம் காட்டி பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழித்து இந்த மண்ணை காக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X