| டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகண்டித்து ஒருநாள் போராட்டம் Dinamalar
டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகண்டித்து ஒருநாள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:23

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீதான வன்முறைகளை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்திய மருத்துவக்கழகத்தின் உறுப்பினர்களான 150 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மருத்துவமனைகளில் நேற்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை 24 மணி நேரம் அவரச சிகிச்சை மட்டுமே அளித்தனர். சங்க தலைவர் டாக்டர் அரவிந்த்ராஜன், செயலாளர் டாக்டர் கலில் ரகுமான், பொருளாளர் டாக்டர் ஆனந்த சொக்கலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மற்றும் நிர்வாகிகள், டாக்டர்கள் பங்கேற்றனர்.



இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை வழங்கும் போது அவர் யார், பணக்காரரா, என பார்த்து சிகிச்சை அளிப்பதில்லை. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மருத்துவத்தொழிலில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும், என்றனர்.ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X