| புதுமடத்தில் துணை மின் நிலையம்அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் Dinamalar
புதுமடத்தில் துணை மின் நிலையம்அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:25

ராமநாதபுரம் : புதுமடம், மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களில் குறைந்த மின்அழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அடிக்கடி மின் தடை செய்வதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எலக்ட்ரிக்,எலக்டரானிக்ஸ் பொருட்கள் சேதமடைந்து வருகிறது. இதனால்அப்பகுதி மக்கள் நடுத்தெரு ஜமாத் தலைவர் நிலோபர்கான் தலைமையில் உச்சிபுளி மின் வாரிய அலுவலம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் உதவி பொறியாளர் கதிரவன் சமரசம் பேசினார்.

புது மடம் பகுதிக்கு தனியாக வயர் மேன்நியமிக்கப்பட்டுள்ளார். புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும், என்றார். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். புது மடம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X