| சரக்கு லாரி மோதிபள்ளி மாணவன் பலி Dinamalar
சரக்கு லாரி மோதிபள்ளி மாணவன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:26

சிக்கல் : சிக்கல் அருகே காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பனைமரத் தொழிலாளர்கள் முருகேசன், முருகேஸ்வரி. இவர்களது மூன்றாவது மகன் அருண்குமார் 13.சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில்8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலையில் 4:30 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிக்கல் கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக சைக்கிளில் சென்றார்.அப்போது, கீழக்கரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற சரக்கு லாரி மோதியது. இதில் மாணவர் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



சாயல்குடி துரைச்சாமிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவசுப்பிரமணியன் 52, என்பவர் மீது சிக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவரின் அண்ணனும், அக்காளும் அதே அரசுப்பள்ளியில தான் படிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X